இந்த வார சபை தியானம் SUNDAY கிறிஸ்தவ வாழ்வின் அடுத்த அத்தியாயம் தலைப்பு : வாசலை தாண்டி உள்ளே செல்லுதல். ( பிரவேசித்தல்) தேவனுடன் நம் உறவை வளர்த்துக்கொள்ளுதலுக்கான அவசியம். கிறிஸ்துவிற்குள் பிரியமானவர்களே..! இன்று நான் ஒரு புதிய விளக்கத்துடன் மேடையில் நின்றேன். நான் எடுத்தது ஒன்று, பேசியது வேறொன்று. ஆனால் அது எனக்கும், சபைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நமக்கான அடுத்த அத்தியாயத்தை குறித்து இந்த நாள் பேச வைத்தது. நாம் ஏன் தேவனை நெருங்க வேண்டும்? தேவனுடன் நெருங்குவதற்கான தேவை என்ன? தேவனுடன் நெருங்கினால் என்ன கிடைக்கும்? தேவனுடன் நெருங்குவது எப்படி? தேவனுடைய உறவில் அடுத்த கட்டம் என்ன? என்கிற பல தலைப்புகளை இந்த நாள் துவக்கி வைத்தது. இந்த செய்தியை பதிவு செய்யவும், பகிரவும் விரும்பி இந்த blogger உருவாக்கினேன். வாசலை தாண்டி உள்ளே செல்லுதல். ( பிரவேசித்தல்) நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது, அறிவது சரிதான். ஆனால் இயேசு கிறிஸ்துவின் நோக்கங்களையும் நாம் அறிய வேண்டும். இயேசு கிறிஸ்து நானே வாசல் என்றார். இயேசு கிறிஸ்து வாசல் எனும்போது வா...
கருத்துகள்
கருத்துரையிடுக